ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி சவால்
இந்தியா டுடே சார்பாக நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழல் தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க நான் தயார் என்று சவால் விடுத்துள்ளார்.இந்நிலையில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இதில் முதலமைச்சரின் சவால் குறித்து ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதற்கு அவர் என்ன பதிலளிப்பார் என்ற ஆவலும் எழுந்துள்ளது.