தினகரனுடன் அதிமுக எம்.எல்.ஏ சந்திப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கான 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தற்போது எம்.எல்,ஏ வாக பலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், பலர் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அதிருப்தியில் உள்ள சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன், அமமுக கட்சி அலுவகத்திற்கு தினகரனை சந்திக்க வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.