பாஜக படுதோல்வி அடையும் – சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, மற்றும் பாமகவுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெற்றிபெறும், இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.