அதிமுக கட்சியில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளார்களின் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆவடியில் க. பாண்டியராஜனும், அண்ணாநகரில் கோகுல இந்திரா, சைதாப்பேட்டையில் சைதை சா. துரைசாமியும் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இந்த பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

சென்னை மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்..

மதுரவாயல் – பா. பென்ஜமின்
அம்பத்தூர் – அலெக்சாண்டர்
மாதவரம் – மாதவரம் வி. மூர்த்தி
திருவொற்றியூர் – கே. குப்பன்
ஆர்.கே. நகர் – ஆர்.எஸ். ராஜேஷ்
கொளத்தூர் – ஆதிராஜாராம்
வில்லிவாக்கம் – ஜேசிடி பிரபாகர்
அண்ணாநகர் – கோகுல இந்திரா
விருகம்பாக்கம் – விருகை
தியாகராயநகர் – பி. சத்திநாராயணன்
மயிலாப்பூர் – ஆர். நட்ராஜ்
வேளச்சேரி – எம்.கே. அசோக்
சோழிங்கநல்லூர் – கே.பி. கந்தன்.
ஆலந்தூர் – பா. வளர்மதி
ஸ்ரீபெரும்புதூர் (தனி) – கே. பழனி
பல்லாவரம் – சிட்லபாக்கம் ச. ராசேந்திரன்
தாம்பரம் – டி.கே.எம். சின்னய்யா

இது தவிர முக்கிய வேட்பாளர்களாக..

ஜோலார்பேட்டையில் கே.சி. வீரமணி

வேப்பனஹள்ளியில் கே.பி. முனுசாமி

பாலக்கோடு தொகுதியில் கே.பி. அன்பழகன்,

பாப்பிரெட்டிபட்டியில் ஏ. கோவிந்தசாமி

ஆரணியில் சேவூர் எஸ். ராமச்சந்திரன்

ராசிபுரம் தொகுதியில் வி. சரோஜா

குமாரபாளையத்தில் பி. தங்கமணி

ஈரோடு (மேற்கு) தொகுதியில் கே.பி. இராமலிங்கம்

பவானி தொகுதியில் கே.பி. கருப்பணன்

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…