வார்த்தையை அளந்து பேச வேண்டும் – ஜெயக்குமார்
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகியுள்ளது.இதனையடுத்து தே.மு.தி.க-வினர் அ.தி.மு.க-வினரை தாக்கி பேசி வருகின்றனர். தே.மு.தி.க-வின் எல்.கே.சுதீஷ் வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும் என காட்டமாக பேசினார்.மேலும் இன்று தே.மு.தி.க-வினருக்கு தீபாவளி என்றும் பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் பொறுமையும்,பக்குவமும் வேண்டும் என பேசினார்.மேலும் கட்சியின் பலத்தை பொறுத்தே தொகுதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தே.மு.தி.க-வினர் வார்த்தையை அளந்து பேச வேண்டும் எனவும் கூறினார்.