பாமக அவசரக் கூட்டம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. இந்நிலையில் பாமக நிர்வாக குழுவின் அவசரக்கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று (09.03.2021) நண்பகல் 12.00 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ் , பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் ,வேட்பாளர் குறித்து அவசர கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது