திருவொற்றியூரில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான் ஆவேசம்!

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதனையடுத்து, சீமான் திருவொற்றியூர் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘அனல்மின் நிலையத்தை உருவாக்கி சாம்பலை தூவி வாழ்வாதாரத்தை அழித்து, வாழும் இடத்தை சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தொகுதியில், காட்டுப்பள்ளியில் 6 ஆயிரம் ஏக்கர் இடத்தை அதானி என்னும் ஒற்றை முதலாளிக்கு கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்.

அவர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்ட செய்ய துணிந்து நிற்கும் பிரபாகரனின் தம்பி உங்களை நம்பி திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி என உரையாற்றிய சீமான் மக்களுக்கான இலவச திட்டங்களை அடியோடு ஒழிப்போம் எனவும் பிரச்சாரம் செய்தார். இலவசங்களை எதிர்பார்க்காத அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப்பாடுபடுவோம். அத்துடன் தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம்” என ஆவேசமாக உணர்ச்சி பொங்க பிரச்சாரம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

யாருமில்லாமல் வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை… குழப்பத்தில் தொண்டர்கள்

வெறிச்சோடியது அதிமுக ஓபிஎஸ் தேர்தல் பணிமனை. ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவாளர்கள்…