தீதியின் ஸ்கூட்டி நந்திகிராமில் விழப் போகிறது – மோடி

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி தீதியின் ஸ்கூட்டி நந்திகிராமில் விழப் போகிறது என்று பேசினார்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு நாட்டில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாநில தலைமை செயலகத்திற்கு தனது இல்லத்திலிருந்து பயணம் செய்தார்.இந்நிலையில் மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி இவ்வாறு விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.