குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவை முற்றிலும் ஒழித்து முற்றிலும் இயந்திரங்களை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தார்.ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்பதை பிரகடனப்படுத்தினார்.அதன்படி இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் 35 லட்சம் கோடி பொருளாதார நிலையை எட்டுவோம் என்றார்.நீர் மேலாண்மை,வேளாண்மை,கல்வி-சுகாதாரம்,நகர்ப்புற வளர்ச்சி,ஊரக கட்டமைப்பு,சமூக நீதி ஆகியவை முக்கிய குறிக்கோளாக வளர்த்தெடுக்கப்படும் என அறிவித்தார்.குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும்,தனிநபர் ஆண்டு வருமானம் 4 லட்சம் என்ற இலக்கு எய்தப்படும் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *