84 தொகுதிகளில் போட்டி… அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம்… அலப்பறை கொடுக்கும் கருணாஸ்!

84 தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு போட்டியிடவுள்ளதாக நகைச்சுவை நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் மற்றும் கருணாஸ் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சட்டப்பேரவை இறுதி கூட்டத்தில் கூட எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இட ஒதுக்கீடு விவகாரம் இன்று வரை நிறைவுபெறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களின் கோரிக்கையை அடுத்தடுத்து நிறைவு செய்தார்.

எனது 12 அம்ச கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக இருந்து 19 முறை சட்டப்பேரவையில் எனது கோரிக்கையை வைத்துவிட்டேன். இன்றுவரை பலனில்லை. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்கச்சொல்லி கோரிக்கை வைத்தும் பலனில்லை. இதனால் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது.

எனது தலைமையிலான அமைப்பு சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும். 84 தொகுதிகளில் அதிமுகவிற்கு எதிராக நாங்கள் களமிறங்குவோம். அதிமுகவிற்கு எதிராக இளைஞர்களை திரட்சி பிரச்சாரம் செய்வேன் ” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…