ஸ்டாலினை தோற்கடிப்பேன் – அப்சரா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முறையும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட திருநங்கை அப்சரா ரெட்டியும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தால் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என திருநங்கை அப்சரா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் செய்தி தொடர்பாளரான அப்சரா ரெட்டி, கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் இரட்டை அர்த்த வசனங்களில் பேசுகிறார் என்று அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.