பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணி – டி.ராஜா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி   திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு மக்கள் உழைப்பால் காட்டி வளர்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவங்களை தனியாரிடம் விற்று வருகிறது என தெரிவித்தார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சி நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; 5 மாநிலங்களில் நடக்கக்கூடிய தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதவெறியை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும். மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் இதர கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள் என டி.ராஜா கூறினார்.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேற்று 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…