முதல் ஆளாக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாமக!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. பிரதான கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை பாமக சந்திக்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் முதல் கட்சியாக பாமக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் காணொலி வாயிலாக வெளியிட அறிக்கையின் முதல் பிரதியை ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ஜூலி பெற்றுகொண்டார். இந்த அறிக்கைக்கு வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம் என பெயரிடப்பட்டுள்ளது.

பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

  • விவசாயம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்
  • அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வி
  • மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த இலவச மருத்துவம்
  • தங்கம் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை
  • காவிரி – கோதாவரி இணைத்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை
  • அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தை உலகத்தரத்துக்கு மாற்ற நடவடிக்கை
  • வரும் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *