திமுக கூட்டணியில் யார் யார்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளில் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால், திமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகிய முக்கியத் தலைவர்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருந்தாலும், திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அடுத்து, மதிமுகவுடனும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை இழுபறியாய் தான் உள்ளது. இதனையடுத்து, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.