திமுகவிற்கு முற்றுப்புள்ளிவைப்போம் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக
திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்கிற பிரச்சாரத்தை இன்று முதல் அதிமுக துவங்கியுள்ளது.
சமூக ஊடகங்களிலும், தேர்தல் களத்திலும் தி.மு.க ஆட்சி காலத்தில் அரங்கேற்றப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் அக்கட்சியின் அடாவடிகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் அ.தி.மு.க புதிய பிரச்சார யுக்தியை இன்று முதல் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க.வின் திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் முன்னெடுத்துள்ளது. முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் எளிதில் சென்றடையும் வகையில் இந்த பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் ட்விட்டர் தளத்தில் துவங்கப்பட்டது, ஆரம்பித்த ஓரிரு மணிகளில் வைரலாக பரவியது. திமுக ஆட்சியில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், மின்சார பிரச்சனைகள், நில அபகரிப்பு மற்றும் ரௌடிகளால் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள் அதிகார துஷ்பிரயோகங்கள், அத்துமீறல்கள், ஊழல்கள் போன்று திமுகவின் ஆட்சியில் நடைபெற்ற பலதரப்பட்ட சித்திரவதைகளை புள்ளி விவரத்தோடு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த பிரச்சாரம் அமையும்.