எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல் பரப்புவதை நிறுத்த வேண்டும் -பா.ஜ.க அதிருப்தி
கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என பா.ஜ.க அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டமானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அதனை எதிர்க்கட்சிகள் கேலிக்கூத்தாகி வருகிறது. முதலில் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக்கொள்வாரா என விமர்சனம் செய்தனர்.ஆனால் தற்போது பிரதமர்,குடியரசுத் தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர் என பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.இந்நிலையில் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன.இதுபோல் பொய்யான தகவல்களை பரப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.