அனிதாவுக்கு நியாயம் கிடைக்க பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம் – உதயநிதி ஆவேசம்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2017ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக அனிதா களத்தில் இறங்கிப் போராடினார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து மனு கொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தையும் நடத்தினார். எதுவுமே பலனிக்காத நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உயிரை மாய்த்துக்கொண்டார்.

அதன் பிறகு தற்போதுவரை நீட் தேர்வுக்கு எதிராக 17 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆயினும் நீட் தேர்வு நீக்கப்படவில்லை.

அனிதாவின் 21ஆவது பிறந்தநாளான இன்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், “இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்க புறப்பட்ட தங்கை அனிதாவின் 21ஆவது பிறந்த நாள் இன்று.

இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்க புறப்பட்ட தங்கை அனிதாவின் 21-வது பிறந்த நாள் இன்று. நீட் தேர்வாலும்அதை திணித்தவர்களாலும் கூட்டுக்கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்கநீட் இல்லா தமிழகம் அமைக்க, அடிமைகள்பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *