அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதில் பெரும்பாலான கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு நேர்காணலை நடத்தி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ளது.

தேமுதிக – அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதில், போடிநாயக்கனூரில் ஓபிஎஸ், எடப்பாடியில் பழனிச்சாமி, ராயபுரத்தில் ஜெயக்குமார், விழுப்புரத்தில் சிவி சண்முகமும், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ் பி சண்முகநாதன், நிலக்கோட்டை தனி தொகுதியில் எஸ் தேன்மொழி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…