விசிகவுக்கு 6 இடங்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்து அண்ணா அறிவாலயத்தில் இன்று முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசிகவுக்கு 4 அல்லது 5 இடங்கள் ஒதுக்கப்படும் எனத தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் 6 இடங்களை ஒதுக்கினால் ஒத்துக் கொள்ளக் கூடாது என கூச்சலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஓர் அணியில் திரள்வது தான் முக்கியம். எனவே, குறைந்த தொகுதிக்கு ஒப்புக்கொண்டுள்ளேன் என அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவன் கையெழுத்திட்டுள்ளார்.