நாளை தொகுதி பங்கீடு குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும் – முத்தரசன் பேட்டி!

திமுக உடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதென்றும், நாளை தொகுதி பங்கீடு குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
திமுக கூட்டணியில் இதுவரை முஸ்லிம் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவைகளின் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அக்கட்சியின் பொது செயலாளார் முத்தரசன், “இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது எனவும், நாளை தொகுதி பங்கீடு குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.