திமுக கூட்டணியில் தான் விடுதலைச் சிறுத்தை – திருமாவளவன்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடுத்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் நீடிக்கும் என்று அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
அக்கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், நேற்று இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு விசிக, செல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பேச்சுவார்த்தையை விசிக புறக்கணிக்கவில்லை. பணிச்சுமை காரணமாக செல்லவில்லை. இன்று பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்தார்.
திமுக கூட்டணியைப் புறக்கணித்து மூன்றாவது அணி அமையுமா என கேள்வி எழுப்பபட்டது. “திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளது. மூன்றாவது அணி என்பது பொருத்தமற்ற கேள்வி” என்று தெரிவித்துள்ளார்.