நாங்க இல்லனா, நீங்க ஒன்னுமே இல்ல.. அதிமுகவை அலறவிடும் சுதீஷ்!

2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என தேமுதிக சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், 2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது என பேசிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்லவில்லை, அவர்கள்தான் நம் பின்னாடி வந்து கொண்டியிருக்கிறார்கள் என பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. அதில், பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…