சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன்?

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட வேண்டும் என விரும்பி நூற்றுக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
கம்பம், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் ஜெயபிரதீப் போட்டியிட விரும்பி நூற்றுக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.