குஜராத் கலவர தவறை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும்

ராகுல் காந்தி எப்படி நெருக்கடிகால தவறை உணர்ந்து மனம் வருந்தினாரோ அதேபோல் பா.ஜ.க-வும் குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான சரத் பவார் கூறியுள்ளார்.

இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலையானது தவறு என காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி மனம் வருந்தினார்.பிரதமர் மோடியும் குஜராத் கலவரத்திற்காக மன்னிப்பு கேட்கும் நேரம் வந்துவிட்டது என மஹாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.மேலும், 45 வருடத்திற்கு பிறகு ராகுல் காந்தி மனம் வருந்தியுள்ளார்.மோடியும் மனம் வருந்துவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.