ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிரச்சாரப் பாடல் வெளியீடு
திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் இன்று தனது 68 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.இதனையடுத்து, பல தலைவர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும், ட்விட்டர் மூலமாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பாடலை வெளியிட்டார். “ஸ்டாலின் தான் வர்றாரு; விடியல் தரப் போறாரு” என்ற அந்தப் பாடல் தொடங்குகிறது.