தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக? முதல்வர் வேட்பாளரா எல்.கே.சுதீஷ்?

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டனி கட்சிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் 3 வது அணியும் போட்டியிட தயாராக உள்ளன. அமமுக கூட்டணி முடிவு குறித்து முடிவு எட்டப்படாத நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி சேரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் நமது முதல்வர் விஜயகாந்த், நமது கொடி எரியும் தீபம், நமது சின்னம் முரசு என்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தேமுதிக வரும் தேர்தலில் தனித்து போட்டியிடவும், முதல்வர் வேட்பாளராக எல்.கே. சுதீஷ் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…