ஆம் ஆத்மியில் இணைந்த மிஸ் இந்திய அழகி
2019-ஆம் ஆண்டின் மிஸ் இந்திய அழகியான மன்ஷி செகால் இன்று ஆம் ஆத்மியில் இணைந்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான ஆளுமையும் அவர் டெல்லி மக்களுக்காக கல்வியிலும்,உடல்நலத்திலும் கொண்டுவந்துள்ள திட்டங்கள் என்னை ஆம் ஆத்மியில் இணைய ஊக்குவித்தது என்றார்.தொடர்ந்து பேசிய அவர் எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அந்நாட்டின் கல்விக்கும் உடல்நலத்திற்கும் அரசு கொடுக்கும் முக்கியத்துவமே காரணமாக அமையும் என்றார்.அந்த வகையில் டெல்லி அரசானது கல்வி,உடல்நலத்தில் மட்டுமல்லாது அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.முதல்வர் கெஜ்ரிவாலை புகழ்ந்து பேசிய அவர் ஆம் ஆத்மியில் அவருடன் இணைந்து நேர்மையான அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறினார்.