குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றது இதற்குதான் – அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை பெற்றுள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்றுள்ளோம் என பா.ம.கவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ரரமதாஸ் கூறி உள்ளார்.

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.,கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியதாலும், 40 ஆண்டுகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாலும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைவாக பெற்றுள்ளோம் என்றார்.

பா.ம.க., கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. தற்போது நடைபெற உள்ள 2021 ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க., அணியில் பா.ம.க., இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…