கமல் – சரத்குமார் கூட்டணி!

தமிழகத்தில், ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயகக் கட்சி வெளியேறி உள்ளது.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள், மக்கள் நீதி மக்கள் கட்சித் தலைவர் கமலஹாசனை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் சரத்குமார், அமமுகவின் சசிகலாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…