அதிமுக – பாமக தொகுதி பங்கீடு கையெழுத்தானது!

அதிமுக – பாமக கூட்டனி இடையிலான தொகுதி பங்கீடு கையெழுத்தானது. அதன்படி பாமக கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் மும்முரம் காட்டி வருகிறது. அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தை, இன்று மாலையில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக கட்சி சார்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோரும், பாமக கட்சி சார்பாக ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, மாநிலத் தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக – பாமக தொகுதி பங்கீடு  குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் பாமகாவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார். மேலும்  எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

20 வருடங்களுக்கு பிறகு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…