நம் வெற்றியைத் தடுப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்; விழிப்புடன் இருங்கள் – ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில், “தேர்தல் களத்திற்கு பாக முகவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நீங்கள் இல்லை என்று சொன்னால் அந்தக் களத்தில் நாம் முழு வெற்றியை பெற்றிட முடியாது. அதை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி அந்த களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றக் கூடியவர்கள், நீங்கள்.

அனைத்து களப்பணியாளர்களும், பூத் முகவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் – ஏதோ கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, இந்த முறை 234 தொகுதிகளிலும் முறைப்படுத்தி இது அமைக்கப்படவேண்டும் என்று தலைமைக் கழகத்தில் இருக்கும் வழக்கறிஞர்கள் மூலமாக மாவட்டக் கழகச் செயலாளர்களிடத்தில் அறிவுறுத்தி, அந்தப் பணியை இன்றைக்கு நாம் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறோம்.

நான் பொதுக்குழுவில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அடிக்கடி சொல்வதுண்டு. நாம் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது. நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று இன்றைக்கு மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

எவ்வளவு தான் கொள்ளை அடித்தாலும், எவ்வளவு தான் அக்கிரமம் செய்தாலும், எவ்வளவு தான் ஊழல் செய்து கொண்டிருந்தாலும், அ.தி.மு.க.வே ஆட்சியில் இருக்கட்டும். திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் அடுத்து தோற்கடிக்கவே முடியாது. தொடர்ந்து அவர்களள் தான் ஆட்சியில் இருப்பார்கள் என்ற ஒரு பயம், அச்சம் இன்றைக்கு ஒரு சில குறிப்பிட்டவர்களுக்கு வந்திருக்கிறது.

எனவே, தேர்தலில் நாம் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றிட முடியாது. நான் ஏதோ சந்தேகத்தில் சொல்கிறேன் என்று நினைக்கக்கூடாது. நம் வெற்றியை தடுப்பதற்கு பல முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, விழிப்புடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…