வங்காளம் மட்டுமே மேற்கு வங்காளத்தை ஆளும் – மம்தா பானர்ஜி!

சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ஹுக்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய கலகக்காரர். அமித்ஷாவும், நரேந்திர மோடியும் நாடு முழுவதும் பொய்யையும் வெறுப்பையும் தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வன்முறை மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி எதிர் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன். பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என்றும், வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும் என்றும், பாஜக மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால், நாட்டிலிருந்து நிச்சயமாக தூக்கி எறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…