மியான்மருக்கு உதவியை நிறுத்துகிறதா ஜப்பான்?

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மியான்மர் ராணுவமானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறைபிடித்து மியான்மரின் அரசை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

ராணுவம் தனது தரப்பிலிருந்து தேர்தலில் நடைபெற்ற முறைகேடே சிறை பிடிப்பிற்கு காரணம் என்று விளக்கமளித்துள்ளது.ராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.அந்த வரிசையில் ஜப்பானும் தற்போது இணைந்துள்ளது.ஜப்பான் மியான்மருக்கு கொரோனா சமயத்தில் பல்வேறு உதவிகளை அளித்து வந்த நிலையில் மியான்மர் ராணுவத்தின் இந்த செயலானது ஜப்பானின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.மேலும் விரைவில் மியான்மரின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.மேலும் ஆங் சாங் சூகி-யையும் விடுவிக்குமாறு தெரிவித்துள்ளது.