அமமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்… டிடிவி தினகரன் முதல்வர் வேட்பாளர்?

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வர் ஆக்காமல் ஓயமாட்டோம் என்று இன்று நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழுகூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காணொளி மூலம் நடைபெற்ற இந்த பொதுகூட்டத்தில் கட்சியின் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுகவினை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வர் ஆக்காமல் விடமாட்டோம் என்றும், தேர்தலில் கூட்டனி பற்றி முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அதிமுக மீட்டெடுக்க தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் தன் பக்கம் வரவேண்டும் என்றும் நேற்றைய தினம் அறிவித்தார் சசிகலா. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர்டிடிவி தினகரன் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…