விரைவில் பாஜகவில் பி.டி.உஷா

இந்தியாவின், ‘தங்க மங்கை’ என்றழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீராங்கனை, ஒலிம்பிக் சாம்பியன் பி.டி.உஷாவை பாஜகவில் இணைக்க அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 பி.டி.உஷா, பாஜகவில் இணைவார் என்ற செய்தி மக்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்காது. ஏனெனில், பி.டி.உஷா ஏற்கனவே மத்திய அரசுக்கு ஆதரவாகப் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதே போல, சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களையும் அவர் ஆதரித்துள்ளார். அவரின் சமூக வலைத்தள கணக்குகளில் வெளியான பதிவுகள் அனைத்தும் அவர் பாஜகவுக்கு ஆதரவானவர் என்பதை காட்டுவதாகவே உள்ளது.

மேலும், சமீபத்தில் சூழலியர் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் பாடகி ரிஹான்னாவின் கருத்துக்களைக் கண்டித்து அவர்களுக்கு எதிராக பி.டி.உஷா ட்விட்டரில் கருத்து பதிவிட்டது கவனிக்கத் தக்கது. சினிமா, சமூகம் சார்ந்த நட்சத்திரங்களை கட்சிக்குள் இணைக்க பாஜக தீவிரமாக பணியாற்றி வருவது இதன் மூலம் தெரிகிறது. சமீபத்தில் ’மெட்ரோ மேன்’ என அழைக்கப்படும் ஸ்ரீ தரன், பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…