ஆட்சியைக் கவிழ்க்க சதி – நாராயணசாமி
புதுச்சேரியில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையில் இன்று சட்டப்பேரவை கூடியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, சட்டப்பேராவையில் உரையாற்றி வரும் முதல்வர் நாராயணசாமி, ”ஆட்சியைக் கவிழ்க்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி அரசுக்கு புதுச்சேரி மீது அக்கறை இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் என்ன வேண்டுமாலாலும் செய்யலாமா?” என குற்றச்சட்டாடியுள்ளார்.