மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
.கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் நடந்த பேரணியில், மம்தாவின் ஆட்சியில், சிட்பண்டு மோசடி, ரோஸ்வேலி மோசடி, உறவினர் மோசடி என பல நடந்துள்ளது. பிரதமர் மோடி, மேற்கு வங்க மக்களுக்கு அனுப்பிய நிதி உறவினர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் சென்றுவிட்டது என தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் அபிஷேக், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது, அவர் வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.