காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா?

புதுச்சேரியில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் பதவி விலகினர். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் 14 இடங்களைப் பெற்று சமநிலையில் உள்ளது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர் ராஜனுக்கு புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நாராயண சாமி பிப்ரவரி 22 ஆம் தேதி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக புதுச்சேரி மாநில தலைவர் சாமி நாதன் தெரிவித்துள்ளார்.

இதனால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், முதல்வர் நாராயண சாமி எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. நாங்கள் நிரூபிப்போம் என தெரிவித்துள்ளார்.