திமுகவின் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில், பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளை ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, இன்று தேனி மாவட்டத்தில் பரப்புரை நடைபெற்றது.
அதில், திமுக தலைவர் ஸ்டாலின் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார்.
”திமுகவின் 11 ஆவது மாநில மாநாடு, மார்ச் 14 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.