தமிழிசை பொறுப்பேற்பு

புதுச்சேரி, துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக தெலுங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனயடுத்து, நேற்று மாலை புதுச்சேரி வந்த தமிழிசை இன்று காலை புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார்.

குடியரசு தலைவரின் அறிவிப்பை தலைமை செயலர் படித்தார். அதற்குப் பின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்,  தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அதனைத் தொடரந்து, ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டார். பதவி ஏற்பு விழா காலை 9.05 மணிக்கு துவங்கி 9.12 க்கு முடிவடைந்தது. பின்னர், தமிழிசை காவல்துறையின் மரியாதையை ஏற்றார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…