கிரண்பேடி அதிரடி நீக்கம்!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் தங்கள் எல்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு எண்ணிக்கை 14 ஆக குறைந்தது.
இதனைத்தொடர்ந்து, முதல் அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். மேலும் ஒரு அதிரடி புதுச்சேரியில் நடந்துள்ளது.

புதுச்சேரி ஆளுரராக இருந்த கிரண்பேடி, நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் ” என்று சவால் விடுத்துள்ளார்.