சட்டப்பேரவைத் தேர்தலில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டி?

சென்னை, திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதை நடிகை குஷ்பு சுந்தர், தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு, ”திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நான் இடம் கேட்கவில்லை. திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார்.

மேலும், அவர் 234 தொகுதிகளிலும் நாங்கள் தேர்தல் பணியாற்றுவோம். பிரபலமான முகங்களுக்குப் பதிலாக அரசியல் வெற்றி வாய்ப்பு இருப்பவர்களுக்கே சீட் வழங்குவது பாஜகவின் வழக்கம். அந்த வகையில், வகுக்கப்பட்ட நெறிமுறைகளின் படியே சீட் வழங்கப்படும். பாஜக வேட்பாளர் குறித்து அறிவிக்க இன்னும் நேரம் இருக்கிறது.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைத் தடுக்க மோடி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று குஷ்பு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…