தமிழில் பேசிய பிரதமர் மோடி

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று, பிரதமர் மோடி சென்னை வந்தார் . சென்னை வந்த பிரதமர் மோடிக்கு அதிமுக, பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

இதை தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கு விழா மேடைக்கு வந்த மோடி வண்ணாரபேட்டை – விம்கோ மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கியை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், தமிழில் உரை தொடங்கிய பிரதமர் மோடி வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று பேசினார். தமிழக மீனவர்கள் நலன், தேவேந்திர குல வேளாளர் ஏற்பு உள்ளிட்டவற்றை பேசிய பிரதமர் மோடி அவ்வையார், மகாகவி பாரதியார் ஆகியோரின் பாடல்களையும் மேற்கொள் காட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின், பிரதமர் மோடி உடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிப்ரவரி 25-ம் தேதி கோவை வர உள்ள நிலையில் இவர்களது ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும்  தமிழக ஆளுநர் ,பங்காரு அடிகளார், அப்பல்லோ மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டி,மகள் பீரித்த ரெட்டி ஆகியோர் மரியாதை நிமித்தமாக  பிரதமர் மோடியை சந்தித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…