பிரதமர்சென்னை வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து காரில் நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்குச் செல்கிறார். 11.15 முதல் 12.30 வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மேலும், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து, இந்திய ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜீன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவரை வரவேற்க பாஜக சார்பிலும், அதிமுக சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழா நடக்கும் அரங்குக்கு வெளியே, 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…