பாஜக நிர்வாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன், கடந்த மாதம் 31 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியது மட்டுமல்லாமல் முஸ்லீம்களுக்கு எதிராக மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் கல்யாணராமனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.
எனவே,கல்யாண ராமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தர்விட்டுள்ளார். இதனையடுத்து, ஏற்கனவே சிறையில் உள்ள கல்யாணராமனிடம் அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.