இத்தாலியிலும் முகக்கவசத்தில் இருந்து விடுதலை

சீனாவின், வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனையடுத்து, அனைத்து உலக நாடுகளும் தடுப்பூசி போடுவது, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டதாலும், தொற்றின் பாதிப்பு குறைந்துள்ள காரணத்தாலும் அந்நாட்டு மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இத்தாலியிலும் தொற்று குறைவான பகுதிகளில் உள்ள மக்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜூன் 28 ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொற்று அதிகமுள்ள பகுதிகளில் இந்த தளர்வுகள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *