நீதிமன்றங்களில் தொடங்குகிறது நேரடி விசாரணை

இந்தியாவில், அதிகமாகப் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நீதிமன்றங்களிலும் நேரடியாக விசாரணை நடத்தப்பாமல் ஆன்லைனில் காணொலி வாயிலாகத் தான் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதி மன்றங்களும் இந்த முறையில் தான் வழக்கு விசாரணையத் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏழாயிரமாகக் குறைந்துள்ளதால், ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் ஜூன் 28 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடியாக விசாரணை நடைபெறத் தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *