இரயிலில் ஆண் பயணிகளுக்கான நேரக் கட்டுப்பாடுகள்
தமிழகத்தில், அதிகமாக இருந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தொற்று பாதிப்பு சற்று குறைந்த நிலையில், இன்னும் முழுமையாக நீங்காததால் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ இரயில்கள் ஆகியவை இயங்குவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. சென்னை புற நகர் இரயில்கள் நாளை முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தங்கள் அலுவலக அடையாளம் கார்டை பயன்படுத்தி 24 மணி நேரமும் பயணிக்கலாம். அவர்களுக்கு சீசன் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களும் வழங்கப்படும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் இரயில்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆனால், ஆண்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆண் பயணிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் ஆகிய ஏழு மணி நேரமும் அதையடுத்து இரவு 7 மணி தொடங்கி கடைசி ரயில் வரை பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரயில் பயணங்களின் போது, முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என இரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.