+2 மதிப்பெண்களை ஜூலை 31க்குள் வெளியிட உச்சநீதி மன்றம் உத்தரவு
இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது.
இதனையடுத்து, மாநில வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் குறையாத காரணத்தால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உத்தரபிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்றது. அப்போது, பிளஸ் 2 மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.