தமிழகத்தில் சதமடித்த பெட்ரால் விலை!

பொதுத்துறை நிறுவனங்கள் உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பத் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து விலை உச்சம் பெற்று வருகிறது.

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 23 காசுகள் உயர்ந்து 98.88 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து 92.89 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.33 ரூபாய்க்கும், திருப்பத்தூரில் 100. 56 ரூபாக்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *